நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி அதிகம் ஏற்படும் வரை காத்திருந்து வைத்தியசாலைக்கு செல்லும் நிலையை தவிர்த்துக்கொள்ளுமாறு மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (26), எரிபொருள் இன்றி வைத்தியசாலைக்கு செல்ல தாமதமாகியதால் தனது மூன்றாவது குழந்தையை வீட்டிலேயே பெற்றெடுத்த சம்பவமொன்று நிக்கவெரட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பொதுவாக குழந்தைப் பிரசவத்தில், முதல் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு, இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கும் போது பிரசவ நேரம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் விஜித் வித்யா விபூஷண தெரிவித்துள்ளார்
எனவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவ வலிக்கான அறிகுறிகள் ஏற்படுமிடத்து, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.