வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இனி வரும் காலங்களில் இந்தியா – ஜெர்மனி இடையிலான உறவு புதிய உயரத்தை எட்டும் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில், அந்நாட்டு சான்சிலரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாநாடு முடிவடைந்த நிலையில், ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பினார்.
இந்நிலையில், ஜெர்மனி பயணம் தொடர்பாக மோடிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து கிளம்பினேன். பல உலக தலைவர்களுடன் கலந்துரையாடினேன். முனிச் நகரில், இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய பின்னர் ஜெர்மனியில் இருந்து கிளம்பியுள்ளேன். ஜி7 மாநாட்டில் சர்வதேச மற்றும் நலன் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட பல விஷயங்களை எங்களால் விவாதிக்க முடிந்தது.
எனது வருகையின் போது சிறப்பாக வரவேற்று உபசரித்த ஜெர்மனி அதிபர் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இந்தியா- ஜெர்மனியில் புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மோடி கூறியுள்ளார். பயணம் தொடர்பான வீடியோவையும் மோடி வெளியிட்டுள்ளார்.
Advertisement