200 பேரை பணிநீக்கம் செய்த Udaan.. ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!

சமீபத்திய மாதங்களாக ஸ்டார்ட் அப்களில் பணி நீக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் ரெசசன் அச்சத்தின் மத்தியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செலவினைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது ஸ்டார்ட் அப் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

3 முத்தான பங்குகள்.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

உடான் அதிரடி

உடான் அதிரடி

அந்த வகையில் தற்போது பிசினஸ் டூ பிசினஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான உடான் நிறுவனம் 180 – 200 பேரை, அல்லது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 5% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்கமானது அசாதாரணமான நிலை என்றும் கூறியுள்ளது.

 வளர்ச்சியை மேம்படுத்த திட்டம்

வளர்ச்சியை மேம்படுத்த திட்டம்

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல், நிறுவனத்தின் வளர்ச்சியினை உறுதிபடுத்தியுள்ளார்.

சந்தையை மேம்படுத்த நாங்கள் எங்கள் வணிக மாதிரியையும், சுறுசுறுப்பாக மாற்றியமைத்து வருகிறோம். இது வாடிக்கையாளரை மையமாக கொண்டதாகவும், வலுவான வணிக மாதிரியாகவும் மாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

செலவு குறைப்பு நடவடிக்கை
 

செலவு குறைப்பு நடவடிக்கை

நாங்கள் வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம். இதில் தேவையில்லாத சில பாத்திரங்களை நீக்கி, சிலவற்றை சேர்த்தும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 பணி நீக்கம்

பணி நீக்கம்

கடைசியாக இந்த பணி நீக்க நடவடிக்கையானது 2021ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனம் நேர்மறையான பங்களிப்பு வரம்பை எட்டியது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய நடப்பு காலாண்டில் யூனிட் எக்னாமிக்ஸ் பாசிட்டிவ் ஆக இருப்பதாகவும் தலைமை நிர்வாகி வைபவ் குப்தா, தனது ஊழியர்களிடம் உள்ள உள்குறிப்பில் கூறியதன் பின்னணியில் இந்த பணி நீக்கங்கள் வந்துள்ளன.

சமீபத்திய பணி நீக்கங்கள்

சமீபத்திய பணி நீக்கங்கள்

அன் அகாடமி – 1000 பேர்

வேதாந்து – 624 பேர்

கார்ஸ் 24 – 600 பேர்

எம்பைன் – 500 பேர்

ட்ரெல் – 300 பேர்

லிடோ – 200 பேர்

ரூபிக் – 200 பேர்

உடான் – 180 – 200பேர்

சிட்டிமால் – 191

Furlenco – 180

மீஸோ – 150

பிரண்ட்லோ – 145

எம்பிஎல் – 100

ஒகேகிரெடிட் – 35 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Udaan Lay off up to 200 staff amid cut costs

The number of layoffs in start-ups has been steadily rising in recent months. The company currently employs 180-200 people, or 5% of its total workforce.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.