நேபாளத்தின் காட்மண்டுவில் பானி பூரி விற்பனையை தடை செய்ய மாநாகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை முடிவு செய்தனர். பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் இது குறித்து கூறுகையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் புதிதாக மேலும் ஏழு பேர் காலரா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காத்மாண்டு பெருநகரத்திலும், சந்திரகிரி நகராட்சி மற்றும் புத்தனில்கந்தா நகராட்சியிலும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சகத்தின், தொற்றுநோயியல் மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் சுமன்லால் தாஷ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கண்டெய்னரிலிருந்து கொத்து கொத்தாக எடுக்கப்பட்ட உடல்கள் – அமெரிக்காவில் பயங்கரம்
தற்போது நாட்டில் மொத்த காலரா நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. எனவே, பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானி பூரி விற்பனையை தடை செய்ய பேரூராட்சி நிர்வாகம் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது. பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர்கள் தற்போது டெக்குவில் உள்ள சுக்ரராஜ் வெப்பமண்டல மற்றும் தொற்று நோய்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக, தலைநகரின் வெவ்வேறு பகுதிகளில் ஐந்து காலரா வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில், காலரா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நேபாளத்தின் சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், காலராவின் அறிகுறிகளை இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்லுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக கோடை மற்றும் மழைக் காலங்களில் வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் பிற நீர் மூலம் பரவும் நோய்கள் பரவுவதால், அனைவரும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | White Hair Treatment: நரை முடி கருக்க இயற்கை வீட்டு வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR