ஒரு போதும் இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள்.. கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்க என்ன வழி?

வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கிரெடிட் ஸ்கோரில் செய்யும் 4 தவறுகள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஒரு சிறந்த கிரெடிட் ஸ்கோர் உள்ள ஒரு நபர் எளிதில் கடன் பெற முடியும். அதேபோல வட்டியும் சற்று குறைவானதாக இருக்கும்.

இதே குறைந்த கிரெடிட் ஸ்கோர் உடையவர்களுக்கு சில வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து விடுகின்றன. சிலவை கொடுத்தாலும் வட்டி அதிகமாக இருக்கும்.

கவனத்தில் கொள்ளுங்கள்?

அப்படிப்பட்ட கிரெடிட் ஸ்கோரினை அதிகரிப்பது குறித்து பல முறை பல காரணிகளை படித்திருக்கலாம். ஆனால் எந்த மாதிரியான காரணிகள் எல்லாம் உங்கள் கிரெடிட் ஸ்கோரினை பாதிக்கிறது என்பது குறித்து யோசித்தது உண்டா? அதனை எப்படி தவிர்ப்பது. கிரெடிட் ஸ்கோர் குறையாமல் எப்படி பாதுகாத்துக் கொள்வது? உங்கள் கடன் மதிப்பெண் அதிகரிக்கும் செயல்களை மட்டும் செய்யாமல், குறையும் விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வரம்பை தாண்டாதீர்கள்

வரம்பை தாண்டாதீர்கள்

வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எப்படி சம நிலையாக வைத்துள்ளோமோ? அதேபோல உங்களது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையையும் சரியாக வைப்பது அவசியம். கிரெடிட் கார்டினை அவசர தேவைக்கோ அல்லது ஆடம்பர செலவுக்காக பயன்படுத்தலாம். ஆனால் இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் அதிகபட்ச வரம்பை தாண்டாமல் பயன்படுத்தலாம்.

30%குள் பயன்படுத்துங்கள்
 

30%குள் பயன்படுத்துங்கள்

உங்களுக்கு சரியாக கடன் அட்டை பயன்படுத்த தெரியவில்லை எனில், உங்களது கிரெடிட் கார்டு லிமிட்டில் 30%-க்குள் பயன்பாட்டினை வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மாதத்திற்குள் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதோடு உங்களது கிரெடிட் கார்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் தவறவிடுதல், அல்லது குறைவான தொகையை மட்டும் செலுத்துதல் கூட கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

சரியான நேரத்தில் பில் செலுத்துங்கள்

சரியான நேரத்தில் பில் செலுத்துங்கள்

கிரெடிட் கார்டு பில் கட்டணத்தினை முழுமையாக செலுத்துவதை தவற விடுவதை விட, குறைந்தபட்ச தொகையை செலுத்தலாம். ஆனால் அதனையே வாடிக்கையாக வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் நீங்கள் பணம் செலுத்தியிருந்தாலும் முழுமையாக செலுத்தவில்லை. சரியான நேரத்திலும் செலுத்தவில்லை. இதுவும் உங்கள் கடன் மதிப்பெண்னில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தேவையானதை விட அதிகம் வாங்க வேண்டாம்

தேவையானதை விட அதிகம் வாங்க வேண்டாம்

கார்டினை வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களை கவர குறைந்த வட்டி, போனஸ் என வழங்குகிறார்கள். இது கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், உங்களுக்குத் தேவைப்படும் வரையில் நீங்கள் மற்றொரு கிரெடிட் கார்டு கடனை பெறக் கூடாது. இது உங்களது கடன் சமன்பாட்டை செய்ய முடியாமல் போகலாம். இது சரியான நேரத்தில் பணம் செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோரினை குறைக்க வழிவகுக்கிறது.

கிரெடிட் ஸ்கோரினை சரிபாருங்கள்

கிரெடிட் ஸ்கோரினை சரிபாருங்கள்

அடிக்கடி உங்களது கிரெடிட் ஸ்கோரினை சரிபார்க்கலாம். அப்போது தான் உங்களது கிரெடி ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தாலும், அதனை கவனத்தில் கொள்வது நல்லது. இது தவறுகளை குறைக்கும். இதுவும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்க உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These 4 mistakes can reduce the credit score

Borrowers at banks are well aware of the importance of a credit score. Let’s look at 4 mistakes that make such an important credit score.

Story first published: Tuesday, June 28, 2022, 17:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.