அரபிக்கடலில் ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: அரபிகடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது, அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. இந்த நிலையில் மும்பையில் இருந்து அரபிக்கடல் வழியாக ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, இறங்க வேண்டிய இடத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

latest tamil news

மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் என்னும் எண்ணெய் கிணறு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.