ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் விலகலை அடுத்து நிறுவனத்தின் புதிய தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.