பிரித்தானிய ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த பறவைகளை திடீரென மர்ம உயிரினம் ஒன்று பிடித்து விழுங்கியதைத் தொடர்ந்து, சிறுபிள்ளைகளும் செல்லப்பிராணிகளும் அந்த ஏரிக்குள் இறங்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து எல்லையில் அமைந்துள்ள Cumbria என்ற பகுதியில் அமைந்துள்ள Ullswater ஏரியின் கரையில் அமர்ந்திருந்த Wayne Owens (61) என்ற நபர், ஏரியில் நீந்திக்கொண்டிருந்த இரண்டு பெரிய காட்டு வாத்துக்கள் திடீரென தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்படுவதைக் கவனித்துள்ளார்.
பொதுவாக, ஏதாவது மீன் போன்ற உயிரினம் பறவைகளைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தால், அவை தப்பிக்கப் போராடும். அவை தண்ணீருக்கு வெளியே வந்து வந்து செல்வதைக் காணமுடியும். ஆனால், 5, 6 கிலோ எடையுள்ள அந்தப் பறவைகளை அப்படி ஒரே மூச்சில் தண்ணீருக்கடியில் இழுத்துச் செல்லவேண்டுமானால், அவற்றைப் பிடித்து இழுத்துச் சென்ற விலங்கு மிகப்பெரிய ஒன்றாக இருக்கக்கூடும்.
மறுநாள் மீண்டும் இரண்டு சிறுபறவைகள் அதேபோல் தண்ணீருக்கடியில் இழுத்துச் செல்லப்படுவதையும் கண்டுள்ளார் Wayne.
அது ஒருவேலை ஒரு முதலையாகவோ அல்லது மிகப்பெரிய ஒரு மீனாகவோ இருக்கக்கூடும் என அஞ்சுகிறார் Wayne.
ஆகவே, சிறுபிளைகளும் செல்லப்பிராணிகளும் அந்த ஏரிக்குள் இறங்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.