தனக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அவர் விரைவில் மும்பை செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்துடனே கவுகாத்தி வந்ததாகவும் விளக்கமளித்தார்.
கவுகாத்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பு கூறும் நிலையில், அந்த எம்.எல்.ஏ.க்கள் யார் என கூறுமாறும் ஷிண்டே சவால் விடுத்தார்.
தங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கரே தரப்பு இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.