தீவிரமடையும் நெருக்கடி நிலை! இலங்கை மக்களின் உயிருக்கும் ஆபத்து


நாட்டில் சுகாதார வசதிகள் சீர்குலைந்துள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கிடைக்கும் மருந்துகள் போதுமானதாக இல்லை எனவும், இருப்புக்கள் குறைந்து வருவதாகவும் சங்கம் வலியுறுத்துகிறது.

பொதுமக்களுக்கான கோரிக்கை

தீவிரமடையும் நெருக்கடி நிலை! இலங்கை மக்களின் உயிருக்கும் ஆபத்து | Risk Of Death Of People

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே,

மக்கள் தமக்குக் கிடைக்கும் மருந்துகளை வீணாக்காமல் உரிய அளவுகளில் மாத்திரம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது எரிபொருள் நெருக்கடியால் சுகாதாரத்துறையினர் அவசரமாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு கடமைகளையும் அல்லது வீட்டு வேலைகளையும் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டால், போக்குவரத்து வசதி இல்லாததால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என்றும் மருத்துவர் கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.