சோகம்.. முன்னாள் அமைச்சர் சிவதாச மேனன் காலமானார்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிவதாச மேனன் இன்று காலை 11.30 மணியளவில் காலமானார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், பாலக்காடு மாவட்டச் செயலாளர் உட்பட பல பொறுப்புகளிலும் இருந்தவர் சிவதாச மேனன்.

1987 முதல் 1991 வரை மின்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், 1996 முதல் 2001 வரை கேரளா நிதி அமைச்சராகவும் இருந்தார்.

ஆசிரியர் பணியில் இருந்து அரசியல் பணிக்கு வந்தவர் சிவதாச மேனன். மன்னார்காடுவில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர்.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அதன் வழியே அரசியலுக்கு வந்தவர். 1977-ல் இதற்கென விருப்ப ஓய்வு பெற்று விட்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

1980, 1984 -ம் ஆண்டுகளில் தேர்தல் அவருக்குத் தோல்வியை கொடுத்தது. ஆனாலும் அயராத முயற்சியினால் இருமுறை ஆசிரியரும் ஆனார். சிவதாச மேனனின் மரணம் கேரள இடதுசாரிகள் வட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.