ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சூப்பர் சொகுசு படகை அமெரிக்கா சிறைப்பிடித்துள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் இருந்து ஃபிஜி நாட்டிற்கு வந்த 350 அடி நீளமுடைய அந்த சொகுசு படகு அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு லவுடோவா துறைமுகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது.
பின்னர் அரசால் அதனை பராமரிக்க இயலாது என்பதால் அதனை அனுப்பிவிட வேண்டும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹவாய் வழியாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட அந்த படகு தற்போது சான்டியாகோ துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக சூப்பர் படகுக்கு சொந்தக்காரரான ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் சுலைமான் கெரிமோவ் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.