பெங்களூரு : கடும் எதிர்ப்பையடுத்து, ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட ‘அரசியல் அமைப்பின் சிற்பி’ என அம்பேத்கர் பாடம் மீண்டும் சேர்க்கும்படி கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது.கர்நாடகாவில் பள்ளி பாடப்புத்தகங்களில், பல தலைவர்களின் பாடங்களை நீக்கிவிட்டு, புதியவை சேர்க்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கு பல இலக்கியவாதிகளும், காங்கிரஸ், ம.ஜ.த.,வும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘அரசியல் அமைப்பின் சிற்பி’ என அம்பேத்கர் பாடம் இடம்பெற்றிருந்தது. இது நீக்கப்பட்டது.இதற்கு கர்நாடகா முழுதும் ஆங்காங்கே பலத்த போராட்டங்கள் நடந்தன. பாடப்புத்தகத்தில் மீண்டும் சேர்க்கும்படி முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி அதிகரித்தது.இந்நிலையில், நீக்கப்பட்ட ‘அரசியல் அமைப்பின் சிற்பி’ என்ற பாடம் மீண்டும் சேர்த்து, கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது.இதே போன்று, 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட பக்தி பந்தா, சூபி சந்தா ஆகியோர் பாடங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்த்து வலுத்ததால், மீண்டும் சேர்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement