சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கட்டிடம், ஓபராய் ஓட்டல் ஆகியவை எஸ்பி குழுமம் வடிவமைத்த கட்டிடங்கள்தான்.
டாடா குழுமத்தில் இவர் குடும்பத்துக்கு 18.2 சதவீத பங்குகள் இருக்கிறது. இந்த பங்குகள் அடிப்படையில்தான் பலோன்ஜி மிஸ்திரியின் மகன் சைரஸ் மிஸ்திரி தலைவரானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
1865-ம் ஆண்டு இந்த குழுமம் தொடங்கப்பட்டது. பலோன்ஜி மிஸ்திரி 1929-ம் ஆண்டு பிறந்தார். 1947-ம் ஆண்டு குடும்ப தொழிலில் ஈடுபட தொடங்கினார். 18 வயதில் தொழிலுக்கு வந்தார். 1975-ம் ஆண்டு முதல் குழுமத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். மத்திய கிழக்கு நாடுகள், அபுதாபி, கத்தார், துபை உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவாக்கம் இவரது தலைமையில்தான் விரிவாக்க்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ப பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
குடியரசு தலைவர், பிரதமர். தொழில்துறையினர் என பலரும் பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
-வாசு கார்த்தி
இதையும் படிக்கலாம்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM