எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் என சந்கேத்தின் பேரில் சிறைச்சாலைகளில் இருந்துவருவோரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
குற்றமிழைத்தவர்களாக காணப்படுவோரே எஞ்சியுள்ளனர். இதுதொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். இராஜந்திர ரீதியில் தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளளோம. எவ்வாறான தீர்மானம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறமடியாது என்றும் அவர் கூறினார்.
தனது சமீபத்திய வடக்கிற்கான விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ என சந்தேகிக்கப்படுவோரின் விடுதலை குறித்து உங்களது யாழ் வி;ஜயத்தின் போது ஆராயப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2015 ஆண்டில் இது குறித்து விரிவாக ஆராய்ந்தோம். அப்போது சிறைச்சாலைகளில் 200 எல்.ரீ.ரீ.ஈ சந்தேக உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களின் இந்த எண்ணிக்கையை 70 ஆக குறைத்தோம். இந்த விடயம் குறித்து எழுந்த மானத்தில் தீர்மானத்தை மேற்கொள்ள முடியாதவகையில் பாரிய குற்றச்சாட்டுகள் குமத்தப்பட்டவர்கள் இருந்தனர்.
இதுதொடர்பாக கொழும்பிலும் அநுராதபுரத்திலும் இரண்டு விசேட நீதி மன்றங்களை ஏற்படுத்தி இதுதொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டது. இதற்கமைவாக இன்னும் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளே உண்டு. அடுத்த குழு அதாவது குற்றமிழைத்தவர்களாக காணப்படுவோரே இருக்கின்றனர். இதுதொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். இராஜந்திர ரீதியில் தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளளோம. எவ்வாறான தீர்மானம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறமடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனது கடந்தவார யாழ் விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளை முன்வைத்தனர் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காண முடிந்தது. மூன்று வழிகளில் இதனை முன்னெடுத்துள்ளோம். ஒன்று காணாமற்போனோர் அலுவலகத்தை நடத்திவருகின்றோம்.
கடந்த வாரம் முதல் விசாரணைகளை மீள ஆரம்பித்துள்ளோம். இதேபோன்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல். இதற்காக தனியாக அலுவலகத்தை நடத்திவருகின்றோம்.தீர்மானங்களின் அடிப்படையில் இழப்பீடு வழங்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளோம். வடக்கில் நல்லிணத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டது இது குறித்து விரிவான வகையில் கலந்துரையாடப்பட்டதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கையிலும் கவனம் செலுத்தப்பட்டது. இன்னும் தீர்வு காணப்படாத பொது மக்களின் விடயங்களுக்கு நடமாடும் சேவைகள் ஊடாக தீர்வுகளை வழங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
22 ஆவது திருத்தச்சட்ட மூலம் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.