மிண்டா கார்ப்ரேஷன் பங்கு விலையானது ஏப்ரல் 2022ன் இரண்டாவது 15 நாட்களில் பங்கின் விலை 287 ரூபாய் என்ற 52 வார அதிகபட்சமாக உயர்ந்த பிறகு , கடந்த 2 மாதங்களில் சரிவினைக் கண்டு, தற்போது ஒரு நிலையில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் தான் நிபுணர்கள் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவில்லையா..விமான துறையில் 3 நாட்களில் 57,000 இளைஞர்கள் விண்ணப்பம்.. !
இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் என்ன கணித்துள்ளது? வாங்கலாமா? வேண்டாமா? இலக்கு விலை ஏதேனும் உண்டா? வாருங்கள் பார்க்கலாம்.
வாங்கலாமா?
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் மிண்டா கார்ப்ரேஷன் பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையானது 260 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 190 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இப்பங்கின் விலையானது தற்போது 188.65 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
வேர்ல்பூல் ஆப் இந்தியா
வேர்ல்பூல் ஆப் இந்தியா நிறுவனத்தினையும் வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 2,000 ரூபாயினை கணித்துள்ளது. இந்த பரிந்துரையை கொடுக்கும்போது பங்கின் விலையானது 1536.55 ரூபாயாக இருந்தது. இந்த இலக்கினை 1 ஆண்டில் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன செய்கிறது?
லார்ஜ் கேப் நிறுவனமான வேர்ல்பூல் இந்தியா, 1960ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 19,471.65 கோடி ரூபாயாகும். இது நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் நிறுவனமாகும். இது உள்நாட்டில் உற்பத்தி விற்பனை மட்டும் அல்ல, அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது.
பிவிஆர்
இதே பிவிஆர் பங்கினை வாங்கி வைக்கலாம் என மற்றொரு தரகு நிறுவனம் கணித்துள்ளது. இது சந்தையில் சரிவினைக் கண்டு, தற்போது மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த நிறுவனம் தற்போது ஐனாக்ஸ் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் இந்த ஒப்பந்தம் மேம்படும் நிலையில், இப்பங்கின் விலை அதிகரிக்கலாம். இதன் இலக்கு விலையாக 5பைசா.காம் 1925 – 1980 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இப்பங்கின் விலை தற்போது 1838 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
Brokerage firms recommend buying these 3 stocks: What is the target price?
Experts have recommended buying shares of companies including Minda Corporation, PVR, Whirlpool India.