Economic Sanctions: வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா

பொருளாதாரத் தடைகளால் சிக்கித் தவிக்கும் ரஷ்யா, 40 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.

1917-க்குப் பிறகு முதல் முறையாக, ரஷ்யா வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருந்து தவறிவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் ஏற்கனவே ரஷ்யா மீது பல தடைகள் இருக்கும் நிலையில், வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தை ரஷ்யா சந்திக்கிறது.

இரண்டு பத்திரங்களுக்கான வட்டியாக $100 மில்லியன் தொகையை ரஷ்யா செலுத்த வேண்டும். அதில் ஒன்று அமெரிக்க டாலராகவும் மற்றொன்று யூரோவாகவும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

இந்தத் தொகைகளை ரஷ்யா மே 27 அன்று செலுத்த வேண்டியிருந்தது. 30 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில், தற்போது கடனை திருப்ப செலுத்தும் காலக்கெடு கடந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. .

மேலும் படிக்க | ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா
 
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை என்றும், மேற்கத்திய நாடுகள் வேண்டுமென்றே, ரஷ்யாவை ஒரு செயற்கையான சிக்கலுக்குள் தள்ள  முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டுவதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ரஷ்யா சுமார் 40 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைக் கொடுக்க வேண்டிய ரஷ்யவிடம் பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாக அறிக்கைகள் கூறினாலும், ரஷ்ய அரசாங்கம் பொருளாதாரத் தடைகளையே காரணமாக கூறுகிறது.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யாவிடம் 600 பில்லியன் டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க இருப்பு இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை தற்போது வெளிநாட்டில் சிக்கியிருப்பதால் ரஷ்யா சிக்கல்களை சந்திக்கிறது.

மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

முறையாக, 25% அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரதாரர்கள் தங்கள் பணத்தைப் பெறவில்லை என்று கூறினால், கடனை செலுத்த முடியவில்லை என்று ரஷ்யா அறிவிக்க வேண்டியிருக்கும்.

அது மட்டும் நடந்தால், ரஷ்யாவின் மற்ற அனைத்து வெளிநாட்டுப் பத்திரங்களும் திருப்பி செலுத்தப்படாது என்று ஊகிக்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன, மேலும் பத்திரதாரர்கள் பணம் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
சாதாரண சூழ்நிலைகளில், கடன் கொடுத்தவர்களும், செலுத்தத் தவறிய அரசாங்கமும் பொதுவாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள், அதில் பத்திரதாரர்களுக்கு புதிய பத்திரங்கள் வழங்கப்படும், ஆனால் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்படும்.

ஆனால் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் நிதி அமைச்சகத்துடனான தொடர்புகளைத் தடுக்கின்றன. மேலும் போர் எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் தெரியாது.

மேலும் படிக்க | மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்
 
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளன, ஏனெனில் பல நாடுகள் தங்கள் வணிகங்களை ரஷ்யாவுடன் நிறுத்தியுள்ளதால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படலாம்.  
 
இதனிடையில் சில தினங்களுக்கு முன்னதாக, ரஷ்யாவின் நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அமெரிக்கா தனக்கு சிக்கல்களை ஏற்படுத்தி கடனை திருப்பி அடைப்பதைத் தடுத்தால், மாஸ்கோ அதன் வெளிப்புறக் கடன் பொறுப்புகளை ரூபிள்களில் செலுத்தும் என்றும், பணம் செலுத்துவதற்கான வழிகள் இருப்பதால் பணத்தை திருப்பி செலுத்தாத நிலை என்றும் வராது என்றும் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.