6 மாதத்திற்கு பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..?

இந்திய வர்த்தகச் சந்தை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் செவ்வாய் (இன்று) மற்றும் புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

வைரம் மற்றும் ஆஸ்டோமி சாதனங்கள் உட்பட ஒரு சில பொருட்களின் விலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளைக் கவுன்சில் எடுக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு 28 சதவீத வரி விதிப்பது குறித்த அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

28 சதவீதம் ஜிஎஸ்டி வரி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

ஜூன் 28 -29ஆம் தேதிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் 47வது கூட்டம் நடைபெற உள்ளது.

6 மாதம்

6 மாதம்

சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடப்பதால் பல முக்கியமான விஷயங்களுக்கு இறுதி முடிவுகளை இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கியமான விஷயங்கள் என்ன.. மக்களுக்கு எந்த வகையில் லாபம் கிடைக்கும் என்பதை எப்போது பார்ப்போம்.

ஆஸ்டோமி உபகரணங்கள்
 

ஆஸ்டோமி உபகரணங்கள்

இந்த 2 நாள் கூட்டத்தில் ஆஸ்டோமி உபகரணங்களின் – ostomy appliances (பை அல்லது ஃபிளேன்ஜ், பேரியர் கிரீம், ஸ்லீவ்ஸ், இரிகேட்டர் கிட், மைக்ரோ-போர் டேப்ஸ், ஸ்டோமா பிசின் பேஸ்ட், பெல்ட் உள்ளிட்டவை) ஜிஎஸ்டி விகிதங்களை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கக் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 செயற்கை உறுப்புகள்

செயற்கை உறுப்புகள்

இதேபோல் செயற்கை உறுப்புகள் – prostheses (செயற்கை மூட்டுகள்), எலும்பியல் உள்வைப்புகள் (trauma, முதுகுத்தண்டு மற்றும் உடலில் உள்ள ஆர்த்ரோபிளாஸ்டி உள்வைப்புகள்) மற்றும் ஆர்த்தோஸ்-கள் (பிரேஸ்கள், ஸ்பிளிண்ட்ஸ், பெல்ட்கள் & காலிப்பர்கள்) ஆகியவற்றின் மீது 5 சதவீத ஜிஎஸ்டியை அது முன்மொழிந்துள்ளது.

ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம்

ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம்

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் போன்ப தனிமனித நிதியியல் பாதுகாப்பைப் பாதிக்கும் விஷயங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மாநில நிதியமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இதைப் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜிஎஸ்டி இழப்பீடு

ஜிஎஸ்டி இழப்பீடு

மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீடு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் வழங்கப்படாது, அதாவது ஜூன் 30 உடன் முடிகிறது. சில மாநிலங்கள் கால அவகாசம் கோரியும், இழப்பீடு காலத்தையும் நீட்டிக்கக் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு தொடர்ந்து செவி சாய்க்காமல் உள்ளது. இதற்கான இறுதி முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் அடுத்த வாரம் கூடுகிறது.

ஜிஎஸ்டி செஸ் இழப்பீடு

ஜிஎஸ்டி செஸ் இழப்பீடு

மத்திய அரசு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான இழப்பீட்டுச் செஸ் தொகையை மார்ச் 2026 வரை நீட்டித்துள்ளது.அதாவது ஆடம்பர பொருட்கள் மற்றும் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் சிகரெட், மதுபானம் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் sin tax ஆகியவற்றின் பங்கீட்டை மார்ச் 2026 வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

GST Council’s 47th Meeting happening after 6 months; What to expect from GST Council meeting

GST Council’s 47th Meeting happening after 6 months; What to expect from GST Council meeting 6 மாதத்திற்குப் பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..?

Story first published: Tuesday, June 28, 2022, 14:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.