இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் செயற்பாடு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வழிகாட்டி ஒருவர் காலி மைதானத்தின் முகாமையாளரிடம் ஆடுகளம் குறித்த தகவல்களை கோரியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா வழிகாட்டி காலி மைதான முகாமையாளரிடம் பிட்ச் அறிக்கையை கோரியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா வழிகாட்டியைப் பயன்படுத்தி அறிக்கைகளை பெற முயற்சி
எவ்வாறாயினும், விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் உரிய விசேட பொலிஸ் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பிரஜை ஒருவர் மேற்கூறிய சுற்றுலா வழிகாட்டியைப் பயன்படுத்தி அறிக்கைகளை பெற முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு அறிவிக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.