நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நுரையீரல் மற்றும் இருதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அந்த உறுப்புகள் செயலிழந்து விட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் உறுப்புகள் கிடைக்காமல் போகவே, அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் இயலவில்லை என்று கூறப்படுகிறது.
உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போனதால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.