13 பேர் பலி; 250 பேருக்கு பாதிப்பு| Dinamalar

அம்மான்: ஜோர்டான் துறைமுகத்தில் கிரேனில் இருந்து அறுந்து விழுந்த ‘டேங்கர்’ வெடித்து விஷவாயு பரவியதில் 13 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 250 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான ஜோர்டானின் அக்பா துறைமுகத்தில் குளோரின் டேங்கர்களை கப்பலில் ஏற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது கிரேனில் இருந்த சங்கிலி அறுந்து ஒரு டேங்கர் கப்பலின் மேல்தளத்தில் விழுந்து வெடித்தது. அதில் இருந்து மஞ்சள் நிற விஷவாயு பரவியதில், அந்த இடத்தில் இருந்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் 13 பேர் சற்று நேரத்தில் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட 250 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.டேங்கர் அறுந்து விழுந்து வெடிக்கும் ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.