ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை உரிமையாளர் கண்ணையா லால் என்பவரை கொன்றதாக ரியாஸ் அக்தர் மற்றும் கவுஸ் முகமது ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு ஒன்று டெல்லியில் இருந்து உதய்பூர் விரைந்துள்ளது.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்கடை உரிமையாளரை இரண்டு பேர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் சமூக ஊடகப்பதிவில் இருவரும் தையல்கடைக்காரரைக் கொன்று விட்டதாக அறிவித்தனர்.