நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானில் கடும் மின் பாற்றக்குறை நிலவி வருவதால், ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 14 முதல் 16 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் முக்கிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் விரட்டியடித்தனர்.