இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய நெருக்கடி காரணமாக நாடு சில வாரங்களுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தால் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி பயணக்கட்டுப்பாட்டை விதித்து நாட்டை முடக்க தீர்மானம் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கும் வகையில் சில வாரங்களுக்கு நாட்டை முடக்க அரசாங்கம் தீர்மானம் எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவலுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,