சென்னை: சென்னை கே.கே.நகரில் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் ஓட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 4 மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மது போதையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மாதவரத்தை சேர்ந்த கிஷோர் குமார் காயமடைந்துள்ளார்.