இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 27-ம் தேதி தொற்று பாதிப்பு 11,793 இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.