ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ-வின் சேர்மன் ஆக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே முகேஷ் அம்பானி ரீடைல் விற்பனைப் பிரிவின் சேர்மன் ஆக மகள் ஈஷா அம்பானி-ஐ நியமிக்கப்பட உள்ளார்.
முகேஷ் அம்பானி சற்றும் தாமதிக்காமல் இரட்டை குழந்தைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானிக்கு இரு முக்கிய வர்த்தகப் பிரிவின் தலைமை பொறுப்பைக் கொடுத்துள்ளார்.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை..
ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?
ஈஷா அம்பானி
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ சேர்மன் ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் சேர்மனாக ஈஷா அம்பானியை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புப் புதன்கிழமை கட்டாயம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இரு முக்கியப் பிரிவுகள் மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பிரிவுகளை முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்குக் கொடுக்க உள்ளார்.
முகேஷ் அம்பானி
திருபாய் அம்பானி மறைவிற்குப் பின்பு அம்பானி சகோதரர்கள் மத்தியில் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் சொத்துக்களைப் பிரித்த நாளில் இருந்த முதல் முறையாக முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தில் பின் சீட்டை எடுக்கிறார்.
ஜியோ, ரீடைல்
முகேஷ் அம்பானியின் மூத்த பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி 2015ல் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகப் பணிகளில் இருந்து வரும் நிலையில், இந்திய வர்த்தகச் சந்தையை மாற்றும் முக்கியமான திட்டங்களை இருவரும் செய்து சாதித்துக் காட்டிய நிலையில் தற்போது பொறுப்பு மாற்றப்படுகிறது.
சிங்கம்
இருவருக்கும் சேர்மன் பதவியை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கொடுக்கப்பட்டாலும், அதன் தாய் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி Director பதவியில் முழு அதிகாரத்துடன் தான் இன்னுமும் இருக்கிறார். இது கிட்டதட்ட சிங்கம் தனது கண் பார்வையில் வைத்து குட்டியை வேட்டையாடுவதைப் பார்ப்பது மட்டுமே.
Mukesh Ambani’s daughter Isha ambani set to be named as chairman of Reliance Retail
Mukesh Ambani’s daughter Isha ambani named as chairman of Reliance Retail ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதிவியை கைப்ற்றினார் ஈஷா அம்பானி..!