பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணத்துக்கு நுரையீரல் பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபருக்கும், மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ள நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பும் இருந்ததால், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறித்தி இருந்தனர்.
இதற்கிடையே கொரோனா தொற்றும் தீவிரமடைய, வித்யாசாகரின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதாலும், நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு தீவிரமானதாலும் வித்யாசாகரை காப்பாற்ற மருத்துவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீணானது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று உயிரிழந்தார், அவரது தாய் ராஜ் மல்லிகா மற்றும் மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.