மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணையை தாக்கல் செய்தது தமிழக அரசு.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கைகள் சார்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் ஒரு அரசாணையை சமர்ப்பித்தார்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், பெண்ணாக சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அந்தந்த பிரிவுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதற்கான, தமிழக அரசின் அரசாணையையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
#BigBreaking || MBC பிரிவில் திருநங்கைகள் இணைப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அரசாணை தாக்கல்#HighCourt #MBC #TNGovt #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunal pic.twitter.com/5WdcgoOgIs
— Seithi Punal (@seithipunal) June 29, 2022