கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புதுப்புது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றி வருகின்றன என்பதும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக படித்த இளைஞர்கள் வேலைக்கு செல்வதை விட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் தரும் நிறுவனங்கள் ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை உத்தரவு: பெண்களுக்காக கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
பிரோக்கேப் ஸ்டார்ட் அப்
இந்த நிலையில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றான பிரோக்கேப் என்ற நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. பிரோக்கேப் நிறுவனத்தின் சீரிஸ் சி ஃபண்டிங் ரவுண்டில் கூகுள் நிறுவனம் 40 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.6,500 கோடி கடன்
சிறு மற்றும் குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் சேவையை செய்து வரும் பிரோக்கேப் நிறுவனம் சுமார் 7 லட்சம் இந்தியர்களுக்கு கடன் வழங்கி உள்ளது. இதுவரை இந்நிறுவனம் 6,500 கோடி கடன் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் முதலீடு
இந்த நிலையில் பிரோக்கேப் நிறுவனத்தின் சீரிஸ் சி ஃபண்டிங் ரவுண்டில் 40 மில்லியன் டாலர் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில இந்திய நிறுவனங்கள் பிரோக்கேப் நிறுவனத்தில் சுமார் 30 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் மட்டுமே 40 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
வளர்ச்சி
கூகுள் நிறுவனத்தின் முதலீடு காரணமாக பிரோக்கேப் நிறுவனத்தின் வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் கடந்த ஒரு ஆண்டில் 100 மில்லியன் டாலர் முதலீட்டை எட்டியுள்ளது என்பதும் தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 600 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கம்
கூகுள் நிறுவனத்தின் இந்த முதலீடுகள் தொழிலை விரிவாக்க, சேவை திட்டங்களை வேகமாக்கவும் உதவும் என்றும், கூடுதலான சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க முடியும் என்றும் பிரோக்கேப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Google invests $40 million in Indian fintech startup Progcap
Google invests $40 million in Indian fintech startup Progcap | இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு அடித்த லக்: 40 மில்லியன் டாலர் முதலீடு செய்த கூகுள்