புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் பழனிசாமி கூறியுள்ளார். கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:*ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.*பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.*பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்.*பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.
புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.