நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரபலமான நடிகையாக மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நுரையீரல் பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட வித்யாசாகருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டது. கொரோனாவின் பாதிப்பு அதிகமானதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி மறைந்த வித்யாசாகருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர், ‘என் நண்பர் சாகர் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். நீங்கள் மிகவும் தைரியமாக போராடினீர்கள்.
மீனா மற்றும் நைனிகாவுக்கு இந்த இழப்பை போக்க, நாங்கள் பிரார்த்தனை செய்வோம். அவர்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
RIP my friend Sagar. You fought so bravely. My heart goes out to Meena and Nainika. Our prayers to overcome this loss.
— Jayam Ravi (@actor_jayamravi) June 29, 2022