யாரும் விலைக்கு வாங்காத நிலையில், மத்திய பிரதேச அரசுக்கு சொந்தான ஹெலிகாப்டர் பழைய பொருட்கள் கடைக்கு விற்கப்பட்டது.
Bel 430 VT MPS என்ற ஹெலிகாப்டரை மத்திய பிரதேச அரசு கடந்த 1998 ஆம் ஆண்டு வாங்கியது. பல்வேறு விபத்துக்களை சந்தித்த அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஏழு முறை ஏலம் விடப்பட்டும் யாரும் எடுக்காத நிலையில், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை, விமான பழைய பாகங்களை ஏலம் எடுக்கும் நிறுவனம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.