பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு சம்மதம் தெரிவித்த துருக்கி…உற்சாகத்தில் நோட்டோ கூட்டணி


மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவது தொடர்பான கோரிக்கையை துருக்கி ஆதரிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ செய்வாய் கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் சமர்பித்தனர்.

இதற்கு பெரும்பாலான நோட்டோ உறுப்பு நாடுகள், ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில், ஸ்வீடனில் உள்ள தீவிரவாத அமைப்புகளால் துருக்கி தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது என குற்றம் சாட்டி, ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் விருப்பத்தை நோட்டோவின் முக்கிய உறுப்பு நாடான துருக்கி தொடர்ந்து மறுத்து வந்தது.

மேலும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் நோட்டோ விண்ணப்பத்தை துருக்கியின் விட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்யும் என அச்சுறுத்தியும் வந்தது.

இதனைத் தொடர்ந்து, நேட்டோ உச்சிமாநாடு அதிகாரப்பூர்வமாக மாட்ரிட்டில் தொடங்குவதற்கு முன்னதாக, பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ( Sauli Niinisto) ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson) மற்றும் துருக்கு ஜனாதிபதி தையிப் எர்டோகன் (Tayyip Erdogan) இடையிலான சந்திப்பு செவ்வாய் கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பு நோட்டோ( NATO) அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) தலைமையில் நடைபெற்றது.

இந்தநிலையில் செய்வாய்கிழமை பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ தெரிவித்துள்ள கருத்தில், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நோட்டோ உறுப்பினர் விண்ணப்பதை ஆதரிக்க துருக்கி சம்மதம் தெரிவித்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக துருக்கி வெளியிட்டுள்ள குறிப்பில், துருக்கி விரும்பியதை பெற்றுள்ளது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடதக்க வெற்றியை பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய விமானப்படை விமான தளத்தில் குண்டுவெடிப்பு… உக்ரைன் தாக்குதலா?: வெளியான வீடியோ

ஸ்வீடன் மற்றும் பின்லாந்திற்கான நோட்டோ கதவுகள் தற்போது முழுமையாக திறந்துள்ளது என நோட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கும் தெரிவித்துள்ளார். 

பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு சம்மதம் தெரிவித்த துருக்கி...உற்சாகத்தில் நோட்டோ கூட்டணி | Turkey Ready To Accept Sweden Finland Nato Bids



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.