உதய்பூர் படுகொலை சம்பவம்: தப்பியோடிய இருவரை விரட்டிப் பிடித்த காவலர்கள் – நடந்தது என்ன?

உதயபூர்: உதய்பூரில் டெய்லர் ஒருவரை படுகொலை செய்த இரண்டு நபர்களை போலீஸார் வாகனத்தில் சென்று துரத்திப் பிடித்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பைக்கில் செல்லும் இருவரையும் போலீஸார் ரோந்து வாகனத்தில் விரட்டி மடக்கிப் பிடிக்கின்றனர். காவலர்கள் அவர்கள் இருவரையும் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பின்னர் மேலும் இரண்டு காவலர்கள் பைக்கில் வர அனைவரும் சேர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்கின்றனர்.

அளவு கொடுப்பதுபோல் நடந்த கொடூரம்: உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வருபவர் கானியா லால். இவர் தனது சமூகவலைதளங்களில் அடிக்கடி நுபுர் சர்மா பற்றி பதிவுகளைப் பகிர்ந்ததாகத் தெரிகிறது. இதற்காக கானியா லாலுக்கு பலமுறை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கவுஸ் முகமது, ரியாஸ் அட்டாரி ஆகிய இருவரும் துணி தைக்க அளவு கொடுப்பதுபோல் கானியா லாலின் கடைக்குச் சென்றுள்ளனர். அவரும் அட்டாரிக்கு அளவு எடுக்கிறார். அப்போது அட்டாரி தான் மறைத்துவைத்திருந்த பயங்கரமான ஆயுதத்தை எடுத்து கானியாவை தாக்குகிறார். கானியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார். இந்தச் சம்பவத்தை முகமது கவுஸ் படம் பிடிக்கிறார்.

பின்னர் இருவரும் சேர்ந்து இறைத்தூதரை அவமதித்தற்கான பாடம் என்று கூறுவதுடன், பிரதமர் மோடிக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர். பின்னர் அந்த இடத்திலிருந்து இருவரும் கிளம்பிவிடுகின்றனர். அவர்கள் எடுத்த வீடியோ பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களுக்கும் அனுப்பப்பட்டு அங்கிருந்து வைரலாக பரவுகிறது.

— Nitin Agarwal (@nitinagarwalINC) June 28, 2022

இந்த வீடியோ குறித்து உதய்பூர் காவல்துறை மூத்த காவலர் ஹவாசிங் குமாரியா கூறுகையில், அந்த வீடியோவை பொதுமக்கள் யாரும் திறந்து பார்க்க வேண்டாம். வீடியோ மிகவும் கொடூரமாக இருக்கிறது. ஊடகங்களும் இதனை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கானியா லாலின் தலையை தனியாக துண்டிப்பதே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இலக்காக இருந்துள்ளது. அது முடியாததால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினர். அங்கிருந்து வேறொரு இடத்திற்கு தப்பிச் சென்றனர்.

உதய்பூரில் 144: இந்நிலையில் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ள முதல்வார் அசோக் கெலாட் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.