ஆனித் திருமஞ்சனம் | மகா அபிஷேகமும் அதன் பலன்களும் | Benifits of Maha Abhishekam | சரஸ்வதி ராமநாதன்

அபிஷேகப் பிரியரான ஆடல்வல்ல நாயகனுக்கு வருடத்தில் மொத்தம் 6 அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். இவற்றுள் 3 அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய 3 அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு 6 கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு 6 அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன. பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்’ மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள் குறித்தும் மகா அபிஷேக பலன்கள் குறித்தும் விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.