வாய்தகராறு முற்றியதில் மனைவி கொலை: கணவன் கைது…கைக்குழந்தை தவிப்பு

பாலக்காடு அருகே வாய்தகராறு முற்றியதில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பள்ளிக்குறுப்பை சேர்ந்தவர் அவினாஷ், 30. இவரது மனைவி கோவையைச் சேர்ந்த தீபிகா 28. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான இத்தம்பதியருக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை தம்பதியர் இடையே தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த அவினாஷ், மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

அலறல் சப்தம் கேட்டு அருகில் குடியிருப்போர் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தீபிகாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெரிந்தல்மண்ணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தப்ப முயன்ற அவிநாஷை ஊர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.