இளவயதில் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, இனிமேலாவது துரித உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தாலும், நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார் வித்யாசாகர்.
புறாக்களின் எச்சம் கலந்த காற்றை தொடர்ந்து சுவாசித்து வந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது. அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது.
இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அங்கு சென்ற மன்சூர் அலிகான், அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டியில், அஜினமோட்டோ, விதையில்லாத காய்கறிகள், ரசாயன காய் கறிகளை தான் தமிழ் நாட்டில் நாம் உண்ணுகிறோம். பாஸ்ட் புட் போன்றவற்றை தான் நாம் வீட்டில் சமைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். இனியாவது அதை உண்ணுவதை நிறுத்துங்கள் என உருக்கமுடன் பேசியுள்ளார்.