கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு சரிவாலும் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் இந்திய வர்த்தகச் சந்தை தவித்து வரும் நிலையில், புதிதாக முதலீட்டைப் பெறுவதற்குத் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது.
இதேவேளையில் மொரிஷியஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு?
இந்திய சந்தை
இந்திய பங்குச்சந்தை முதல் ஸ்டார்ட்அப் சந்தை வரையில் அன்னிய முதலீடுகளின் ஆதிக்கம் முதலீடுகள் மிகவும் அதிகம் என்றால் மிகையில்லை, இலங்கையின் அன்னிய முதலீடு 1.5 பில்வலியன் டாலருக்கு குறைவாகவும், பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி 10 பில்லியன் டாலருக்குக் கீழ் இருக்கும் வேளையில் இந்தியா சுமார் 600 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணியை வைத்துக்கொண்டு மாஸ் காட்டி வருகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
ஆனால் இந்தத் தொகை சர்வதேச சந்தை சூழ்நிலைகளால் தொடர்ந்து வெளியேறி வருவது முக்கியப் பிரச்சனையாக இருக்கும் வேளையில் மொரிஷியஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொரிஷியஸ்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக மொரிஷியஸ் நாட்டில் இருக்கும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனர். ஆனால் இதில் பெரும் பகுதி பணம் தற்போது திரும்பப் பெற்று வருவதை மொரிஷியஸ் ரெவென்யூ அத்தாரிட்டி கவனித்துள்ளது.
மொரிஷியஸ் ரெவென்யூ அத்தாரிட்டி
இந்த முதலீட்டின் திடீர் வெளியேற்றத்தை வரி விதிப்பு நோக்கத்தில் பார்த்தால் இதுவரையில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், நாட்டின் முதலீட்டுக் கட்டமைப்பில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக மொரிஷியஸ் ரெவென்யூ அத்தாரிட்டி தெரிவித்துள்ளது.
கேப்பிடல் கெயின்ஸ் வரி
தற்போது மொரிஷியஸ் ரெவென்யூ அத்தாரிட்டி கூறுகையில் மொரிஷியஸ் நாட்டின் முதலீட்டுக் கட்டமைப்பை பயன்படுத்தி உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். விரைவில் முதலீட்டாளர்கள் மொரிஷியஸ்-க்கு கேப்பிடல் கெயின்ஸ் வரி செலுத்த வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் வரி
அதாவது மொரிஷியஸ் நாட்டின் வாயிலாக இந்தியாவில் PE மற்றும் டெபிட் பண்டு-களில் முதலீடு செய்து வெளியேறும் போது, அந்த முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்குக் கேப்பிடல் கெயின்ஸ் வரியை மொரிஷியஸ் நாட்டிற்குச் செலுத்த வேண்டி நிலை உருவாகும்.
ஈவுத்தொகை, வட்டி
இதுவரை மொரிஷியஸ் நாட்டில் ஈவுத்தொகை, வட்டி வருமானம் ஆகியவற்றுக்கு மட்டுமே முதலீட்டாளர்கள் வரி செலுத்தி வந்த நிலையில் தற்போது முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்குக் கேப்பிடல் கெயின்ஸ் வரியை வசூலிக்கத் திட்டமிடுகிறது மொரிஷியஸ் அரசு.
10% வரி விதிப்பு
மொரிஷியஸில் உள்ள ஒரு முதலீட்டு நிறுவனம், AIF மூலதன ஆதாயங்களைப் பதிவு செய்யும் போது, நீண்ட கால ஆதாயங்களுக்கு (இரண்டு ஆண்டுகளில் வைத்திருக்கும் பங்குகளுக்கு) இந்தியாவில் 10% வரி செலுத்த வேண்டும். குறுகிய கால ஆதாயங்களுக்கு, மொரீஷியஸில் உள்ள நிறுவனம் ஒரு நிறுவனமா அல்லது கூட்டாணியா என்பதைப் பொறுத்து இந்தியாவில் வரி 40% அல்லது 30% ஆக இருக்கலாம்.
3% கூடுதல் வரி
இப்போது, இந்திய அரசாங்கத்திற்கு மூலதன ஆதாயத்தின் மீது செலுத்தப்படும் இந்த வரிக்கு மேல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொரீஷியஸில் குறைந்தபட்சம் 3% கூடுதல் வரியை செலுத்த வேண்டும். இது பெரும் சுமையாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி மொரிஷியஸ்-க்குச் செல்லாமல் GIFT AIF-ஐ பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய முதலீடுகள்
பங்குச்சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தை மிகவும் மேசமான நிலையில் இருக்கும் வேளையில் 3 சதவீத கூடுதல் வரி என்பது முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதிப்பு தான். இந்த வரி மாற்றம் மூலம் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளின் அளவுகள் குறுகிய காலப் பாதிப்பை எதிர்கொள்ளும். அதாவது மாற்று வழியைக் கண்டறியும் வரையில்..
Mauritius to levy capital gains tax on PE funds; Foreign investors worried to pay 3 percent more tax
Mauritius to levy capital gains tax on PE funds; Foreign investors worried to pay 3 percent more tax இந்திய முதலீட்டுக்கு ஆப்பு வைத்த மொரிஷியஸ்.. கடைசியில் இதுவும் போச்சா..?!