1917 ஆம் ஆண்டு போல்ஷ்விக் புரட்சிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யா தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. மேலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முன்னாள் சோவியத் யூனியனின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் தொழிலான எரிசக்திக்கு அடுத்தபடியாக தங்கத்தை இலக்காகக் கொண்டுள்ளன.
விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, சமீபத்திய கட்டுப்பாடு நடவடிக்கையில், ஏழு நாடுகளின் குழு, ரஷ்ய தங்கம் இறக்குமதி மிதான தடையை முறையாக அறிவிக்க உள்ளது.
பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கான வழியாக ரஷ்யா தனது பணத்தை ஆதரிக்க தங்கத்தைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா கூறுகிறது. அதற்கான வழியாக தற்போதைய தடைகளுக்கு உட்பட்டு அதிக சில்லரை இல்லாத அந்நிய செலாவணிக்கு தங்கத்தை மாற்றுவதாக உள்ளது.
சில வல்லுநர்கள் இந்த ரஷ்யத் தங்கத்தின் மீதான தடையை ஒரு சில நாடுகள் மட்டுமே செயல்படுத்துவதால், இந்த நடவடிக்கை பெரும்பாலும் அடையாள ரீதியானது. மற்ற நாடுகள் நிர்வாகத்தில் உள்ளவர்கள் உட்பட, ரஷ்ய தங்கத்தின் இறக்குமதி மீதான தடை உலகளாவிய நிதி அமைப்புடன் தொடர்பு கொள்ளும் திறனைக் குறிவைக்கும் என்று கூறுகின்றனர்.
ஜி-7 நாடுகளின் ரஷ்ய தங்கத்தின் மீதான தடை எப்படி செயல்படும்:
ரஷ்யாவிடம் எவ்வளவு தங்கம் உள்ளது?
அமெரிக்காவின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் இரண்டாவது அதிக லாபகரமான ஏற்றுமதி தங்கம் என்பதாலும், கிட்டத்தட்ட 90% ரஷயாவின் வருவாயானது ஜி-7 நாடுகளில் இருந்து வருவதாலும், அதைத் துண்டித்து, ஆண்டுக்கு 19 பில்லியன் டாலர் வருவாய் பெறுவதை தடுப்பது முக்கியமானது” என்று கூறினார்.
மேலும், “ரஷ்யா அதன் பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தவும், அதன் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தவும், அதன் ஆற்றல் ஆய்வுகளை நவீனப்படுத்தவும் தேவையானவற்றைப் பெற முடியாது” என்று பிளிங்கன் கூறினார்.
2014 ஆம் ஆண்டில், புதினின் கிரிமியா மீதான படையெடுப்பிற்காக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை வெளியிட்ட பிறகு, ரஷ்யா தங்கக் கொள்முதலை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அந்த நாடு 100 பில்லியன் முதல் 140 பில்லியன் டாலர் வரை தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. அதில் ரஷ்ய மத்திய வங்கியில் சுமார் 20% உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் மீதான தடை எப்படி வேலை செய்யும்?
7 நாடுகளின் குழுவின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள மற்ற நாடுகளுக்கு ரஷ்யா இன்னும் தங்கத்தை விற்க முடியும் என்றாலும், அது ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயை ஈட்டும் திறனை பாதிக்கும் என்று பேரியல் பொருளாதார் ஆலோசனை நிறுவனத்தின் ரஷ்ய பொருளாதார ஆய்வாளர் கிறிஸ் வீஃபர் கூறுகிறார்.
பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு பிறகு பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்பட்டதிலிருந்து, அதிக அளவிலான ஏற்றுமதி ரசீதுகள்தான் அந்த நாட்டைத் தக்கவைத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்துகின்றன” என்று வீஃபர் கூறினார்.
நடைமுறையில், ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதிக்கான தடைக்கு ஒப்புக்கொண்ட நாடுகளில் இருந்து வரும் மக்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், நடைமுறையில், இது ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நபர்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகள் மற்றும் தடையில் பங்கேற்ற நாடுகளுக்கான தங்க ஏற்றுமதிகள் பறிமுதல் செய்யப்படலாம்.
சுவீஸ் சுங்க அகாரிகள், அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடை மீறல்களைக் கண்காணிக்கும்போது, கடந்த மாதம் இங்கிலாந்தில் இருந்து சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்த 202 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள சுமார் 3 டன் தங்கத்தை பிடித்திருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
தங்க வர்த்தகத்தில் வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
மார்ச் மாதத்தில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவின் மத்திய வங்கியுடனான நிதி பரிவர்த்தனைகளைத் தடுக்க நகந்துள்ளன. அதில் தங்கம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையானது ரஷ்யாவின் சர்வதேச இருப்புகளைப் பயன்படுத்துவதற்கான நாட்டின் திறனை மேலும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ரஷ்யாவின் தங்க வர்த்தகத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் அழைப்புகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்தது.
தங்க விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அமெரிக்க தனிநபர்கள் பொதுவாக ரஷ்யா மற்றும் அனுமதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருடன் தொடர்புடைய தங்கம் தொடர்பான பரிவர்த்தனைகளை வாங்கவோ, விற்கவோ அல்லது எளிதாக்கவோ தடைசெய்யப்பட்டுள்ளனர் என்று கருவூலத் துறை வழிகாட்டுதலை வெளியிட்டது.
இந்த நடவடிக்கை ரஷ்யாவை எப்படி தண்டிக்கும்?
பல்வேறு வழிகளில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொருளாதாரத் தடைகளைப் போலவே, தங்க இறக்குமதித் தடையும் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தவும், அதன் நிதியுதவியைக் குறைக்கவும், பணமோசடியைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனியின் எல்மாவ்வில் நடந்த ஜி-7 கூட்டத்தில், “இந்த தடை ரஷ்ய சுயநலக் குழுக்களை நேரடியாக தாக்கும்; மேலும், இந்த தடை புதினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்கும்” என்று கூறினார்.
“இந்த அர்த்தமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான போரில் புதின் தனது குறைந்து வரும் வளங்களை வீணடிக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்களின் இழப்பில் அவர் தனது ஈகோவை பணமாக்குகிறார்” என்று போரிஸ் ஜான்சன் கூறினார்.
ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்ய பொருளாதாரம் மற்றும் பரந்த உலகளாவிய நிதி அமைப்புக்கு இடையேயான பாதைகளைத் தடுக்க மற்றொரு வழி தடை விதிப்பது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“