அம்பானிக்கு பாதுகாப்பு – திரிபுரா நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அம்பானி குடும்பத்தாருக்கு மும்பையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விவரங்களை கேட்ட உச்சநீதிமன்றம், திரிபுரா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
மகாராஷ்டிரா அரசாங்கம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்த பொதுநல மனுவை திரிபுரா உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருந்தது. அம்பானி குடும்பத்தாருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருக்கிறது என்ற எச்சரிக்கை மற்றும் மகாராஸ்டிரா அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மத்திய அரசு பாதுகாப்பை வழங்கியது. இந்த மனுவை விசாரித்த திரிபுரா உயர் நீதிமன்றம் என்ன மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சில தினங்களுக்கு முன் உச்சநதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மத்திய அரசு, இவ்விவகாரத்தில் திரிபுரா நீதிமன்றத்திற்கு எந்தவதமான அதிகார வரம்பும் இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக பொதுநல மனுதாக்கல் செய்யமுடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.
image
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற சம்பந்தருக்கும் இடைக்கால தடை விதித்தனர். நோட்டீஸ் பிறப்பிக்கபட்டதுடன் வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அவரது மனைவி நீதா அம்பானிக்கு வை பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.