மழை வெள்ளத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம், ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நீர்புகா தன்மைக் கொண்ட மிதக்கும் வீடுகளை வடிவமைத்துள்ளது.
இச்சிஜோ கொமுடென் என்ற அந்த நிறுவனம் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சாதாரண வீடு போன்று தரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீடு, வீட்டைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்தவுடன் தரையை விட்டு மெதுவாக மேலே உயர்ந்து மிதக்கத் தொடங்கிவிடும் என தெரிவித்துள்ளது.
தடினமான இரும்புக் கம்பிகள் மற்றும் கேபிள்களால் தரையுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த வீடு, வெள்ளம் ஏற்படும் போது கேபிள்கள் மெல்ல விடுவிக்கப்பட்டு சுமார் 5 மீட்டர் உயரம் வரை மிதக்கும் என்றும் வெள்ளம் வடிந்தவுடன் மீண்டும் தரைக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளது.