தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் நெடுமாறன். இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் சிகிச்சையும், பாம்பு கடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று அதிகாலை மூச்சு திணறால் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த அவரின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை வைத்து தவறான சிகிச்சை அளித்ததால் நெடுமாறன் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.