செய்யுற வேலைய ஒழுங்க செய்யணும்.. வாடிக்கையாளருக்கு ரூ.39,000 கொடுங்க.. MMTக்கு குட்டு..!

சண்டிகாரில் உள்ள நுகர்வோர் நீதின்மன்றம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான மேக் மை டிரிப்புக்கு, அதன் வாடிக்கையாளருக்கு 39,000 ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த உத்தரவினை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்பினை உறுதி செய்துள்ளதுள்ளது.

மேக் மை டிரிப் – டிக்கெட்

உண்மையில் என்ன தான் நடந்தது? எதற்காக நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தினை திரும்ப செலுத்த கூறியது வாருங்கள் பார்க்கலாம்.

ரஜத் ஷர்மா என்பவரும் அவரது குடும்பத்தினரும் மார்ச் 2019ல் பாக்டோராவிற்கு செல்லவும், சண்டிகரில் இருந்து திரும்பவும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக அப்போது கட்டணமாக 51,688 ரூபாயினை செலுத்தி, முன்பதிவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணம் திரும்ப தரப்படவில்லை

பணம் திரும்ப தரப்படவில்லை

இதற்கிடையில் எந்த வித முன்னனிறிவிப்பும் இன்றி, அவர்கள் திரும்பும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தான் ரஜத் ஷர்மா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை இத்தோடு முடியவில்லை. பலமுறை முயற்ச்சித்த போதிலும் கூட ரத்து செய்யப்பட்ட விமான பயணத்திற்கான கட்டண தொகையை, திருப்பித் தரவில்லையாம். அதோடு விமானம் ரத்து செயப்பட்டதோடு வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடும் எதுவும் செய்யப்படவில்லை.

மற்றொரு விமானத்தில் பயணம்
 

மற்றொரு விமானத்தில் பயணம்

இதற்கிடையில் ரஜத் ஷர்மா குடும்பத்தினர் மற்றொரு விமானத்திற்கு பதிவு செய்து, அதில் பயணித்துள்ளனர். அதன் கட்டணம் 36,469 ரூபாய் என்றும் கூறப்படுகின்றது..

பணத்தினை திரும்ப தராததால் மேக் மை டிரிப், வேறு வழியின்றி பழியினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது மாற்றியது

திவால் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ்

திவால் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ்

ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமோ இந்த நேரத்தில் செயலிழந்து விட்டது. அதோடு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முன்பு திவால் நடவடிக்கையில் இருந்தது குறிப்பிடத்தகக்து.

மேக் மை டிரிப் பயனர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக ஒப்புக் கொண்டுள்ளனர். விமானத்தினை விமான நிறுவனம் ரத்து செய்துள்ளதால், விமான நிறுவனமே பொறுப்பாகும் என்றும் கூறியது.

மேக் மை டிரிப்புக்கு குட்டு

மேக் மை டிரிப்புக்கு குட்டு

இந்த நிலையில் தான் மேக் மை டிரிப் நிறுவனத்தை வாடிக்கையளாருக்கு திரும்ப வரும் கட்டணமான 29,080 ரூபாயினை திரும்ப செலுத்தவும், அதோடு வாடிக்கையாளரை அலைகழித்ததற்காக இழப்பீடாக 10,000 ரூபாயினையும் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கொடுத்தே ஆகணும்?

கொடுத்தே ஆகணும்?

இந்த உத்தரவினை எதிர்த்து மேக் மை டிரிப், மாநில ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது.

இதற்கிடையில் இதனை விசாரித்த மாநில ஆணையமும், அதனை உறுதி செய்துள்ளது. விமான டிக்கெட்டுகளை பதிவு செய்ய கட்டணம் வசூலித்த மேக் மை டிரிப், சரியான சேவையை செய்ய தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடும் செய்யப்படப்வில்லை. இதனால் மேக் மை டிரிப்பின் மேல் முறையீட்டினை ரத்து செய்து, மாவட்ட ஆணையத்தின் உத்தரவினை உறுதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

flight cancelled without refund: Consumer court orders Make My Trip to pay Rs 39,000 to customer

Consumer Court in Chandigarh has ordered online ticket booking site Make My Trip to pay its customer Rs 39,000.

Story first published: Wednesday, June 29, 2022, 18:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.