ஷம்ஷேராவில் 1800ல் நடக்கும் கதை

சஞ்சு படத்திற்கு பிறகு 4 வருட இடைவெளிக்கு பிறகு ரன்பீர் கபூர் நடித்திருக்கும் படம் ஷம்ஷேரா. இதில் ரன்பீர் கபூருடன் சஞ்சய்தத், வாணி கபூர், அஷூதோஸ் ராணா, ரோனித் ராய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கரன் மல்ஹோத்ரா இயக்குகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பல் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான, ஜி ஹுசூர் இன்று வெளியாகி உள்ளது. இதனுடன் படத்தின் கதை பற்றிய விபரங்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: காஸா என்கிற கற்பனை நகரத்தில் நடப்பதாக ஷம்ஷேராவின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு போர் வீர பழங்குடியினர், ஷுத் சிங் என்ற ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியால் சிறைவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர். அடிமையாகி, அடிமையிலிருந்து தலைவனாகி, பின் தன் கூட்டத்திற்கு ஒரு அடையாளமாக மாறும் ஒரு மனிதனின் கதையே ஷம்ஷேரா. தனது கூட்டத்தின் சுதந்திரத்திறக்காகவும், கண்ணியத்திற்காகவும் அயராது போராடும் வீரனின் பெயர் தான் ஷம்ஷேரா.

பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இக்கதை, 1800-களின் இந்தியாவில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத், ரன்பீர் கபூரின் எதிரியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக் காட்சிகளில் அவர் ரன்பீருடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் அதிரடிக் காட்சிகள் பேசப்படுவதாக இருக்கும். இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை, 22ம் தேதி வெளியாகிறது.

இவ்வாறு தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.