காலே டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டுகளை இலங்கை கைப்பற்றியது.
காலேவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக திக்வெல்ல 58 ஓட்டங்கள் விளாசினார்.
அதனைத் தொடந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடி வீரரான டேவிட் வார்னரின் விக்கெட்டை ரமேஷ் மெண்டிஸ் வீழ்த்தினார். இதனால் 25 ஓட்டங்களில் அவர் வெளியேறினார்.
பின்னர் வந்த லபுசாக்னே 13 ஓட்டங்களில் இருந்தபோது ரமேஷ் மெண்டிஸ் ஓவரில் அசிதா பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 6 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார். அவர் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸால் ரன்அவுட் ஆனார்.
Just one fielder behind square and Labuschagne picks him out! #SLvAUS
Mendis has a couple now: https://t.co/FT3dcx1fsJ pic.twitter.com/dQEMBuheGy
— cricket.com.au (@cricketcomau) June 29, 2022
அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கவாஜா 47 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
13 wickets fall as Australia reach Stumps on Day one 98/3 after bowling out Sri Lanka for 212.#SLvAUS pic.twitter.com/Y43avWtf6x
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 29, 2022
முதல் நாளிலேயே அவுஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது பெரிய அளவில் முதல் இன்னிங்சில் சாதமாக அமைந்துள்ளது.