ஜிஎஸ்டி கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்.. என்னவெல்லாம் விலை அதிகரிக்கும்?

ஜிஎஸ்டி கவுன்சிலி 47வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று சண்டீகரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவாக சில்லறை விற்பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியினை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பணவீக்கத்தினால் பல பொருட்களின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவானது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.

6 மாதத்திற்கு பின்.. ஜிஎஸ்டி கூட்டம் இன்று துவக்கம்.. கவனிக்க வேண்டியது என்ன..?

எதற்கெல்லாம் ஜிஎஸ்டி?

எதற்கெல்லாம் ஜிஎஸ்டி?

பேக் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பெயரிடப்பட்ட இறைச்சி (உறைந்த பொருட்கள் தவிர) என அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மீன், தயிர், தேன், கோதுமை மற்றும் பிற தானியங்கள், கோதுமை மற்றும் மெஸ்லின் மாவு, வெல்லம், அரிசி (Muri) என பலவும் இந்த லிஸ்டில் அடங்கும்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

மொத்தத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவால் இறைச்சி, பால், தயிர், பன்னீர், தேன், பிரெட் வகைகள், மாவு வகைகள், மீன்கள் என பலற்றின் விலை அதிகரிக்கலாம். இது மட்டும் அல்ல இது சார்ந்த அனைத்தும் விலையேற்றம் காண இது வழிவகுக்கலாம்.

 

வாடிக்கையாளர்கள் அதிருப்தி
 

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

அஞ்சலத்தின் சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி சலுகையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி அஞ்சல் சேவைக்கு ஜிஎஸ்டி கட்டம் வசூலிக்கப்படலாம்.

இதற்கு ஜிஎஸ்டி கட்டணமே வசூலிக்கப்பட்டாலும், வங்களில் சேவைக் கட்டணம் அதிகம் என்பதால் இது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாது.

 

12%-ல் இருந்து 18% ஆக அதிகரிப்பு

12%-ல் இருந்து 18% ஆக அதிகரிப்பு

மோட்டார் பம்புகள், பால் பண்னை இயந்திரங்களுக்கான வரி 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர எல்டிடி பல்புக்ள், விளக்குகள் பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கும் 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மனை படுக்கைகள் 5000-க்கு மேல் உள்ள அறை வாடகைக்கு, ஐடிசி இல்லாத அறைக்கு (ஐசியு தவிர்த்து) 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரி குறைப்பு

வரி குறைப்பு

ரோப்வே மூலம் சரக்குகள் மற்றும் பயணிகளின் மீதான போக்குவரத்து மீதான ஜிஎஸ்டி விகிதம் 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாதுகாப்பு பொருட்கள் மீதான ஐஜிஎஸ்டி வரியில் இருந்தும் விலைகு அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வண்டு வாடகை: எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு, ஆப்ரேட்டர்கள் சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கான ஜிஎஸ்டி விகிதத்தினை 18%ல் இருந்து, 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எலும்பியல் உபகரணங்கள்: பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு சாதனங்கள் , உடலின் செயற்கை பாகங்கள், இயலாமைக்கு ஈடு செய்ய உதவும் பொருட்கள், உள்ளிட்ட சில வற்றிற்கும் 12%ல் இருந்து, 5% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி

English summary

GST: pre packed curd, panneer, makhana, wheat to attract 5% GST: what will get costlier?

It seems that GST can be levied on pre packaged goods and labeled meats (except frozen). This list includes fish, yogurt, honey, wheat and other grains, as well as wheat and meslin flour, jaggery, and rice (Muri).

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.