உலகம் முழுவதும் உருவாகி வரும் பொருளாதார மந்த நிலையை யாராலும் தடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனைத்து தரப்பு நிறுவனங்களும் பெரும் வீழ்ச்சியில் இருந்து எப்படியாவது தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதனால் ஊழியர்கள் தான் தற்போது பலி ஆடாக மாறியுள்ளனர், நிறுவனங்கள் தங்களது செலவை குறைக்கும் விதமாக அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளனர்.
இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் ஊழியர்களும் தங்களது பணிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது பெரும் போராட்டமாக மாறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் எந்தெந்த நிறுவனங்கள் ஊழியர்களை பணிவீக்கம் செய்துள்ளது தெரியுமா..
நான் இருக்கும் வரை நடக்காது.. Zoho ஸ்ரீதர் வேம்பு அதிரடி..!
NOVARTIS நிறுவனம்
சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் NOVARTIS நிறுவனம் சுமார் 8000 ஊழியர்களை உலகம் முழுவதிலும் இருக்கும் தனது வர்த்தகத்தில் இருந்து பணிநீக்கப்பட உள்ளது.
இதில் சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டும் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகை சேமிக்க முடியும் என NOVARTIS நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைஜூஸ்
ஏற்கனேவே இந்தியாவில் பல முன்னணி எட்டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் பைஜூஸ் தனது கிளை நிறுவனமான டாப்பர்-ல் இருந்து 300 ஊழியர்களையும், WhiteHat Jr நிறுவனத்தில் இருந்து 300 ஊழியர்கள் என பைஜூஸ் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
டெஸ்லா
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது கலிப்போர்னியா அலுவலகத்தை மொத்தமாக மூட முடிவு செய்த நிலையில் ஆட்டோபைலட் அணியில் இருந்து மட்டும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மீதமுள்ள 150 ஊழியர்களை அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம்.
oye ரிக்ஷா
குருகிராம்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் oye ரிக்ஷா தொடர்ந்து நஷ்டத்தை எதிர் கொண்டு வந்த காரணத்தால் சுமார் 40 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களே 200 பேர் மட்டுமே.
Udaan
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Udaan நிறுவனம் நேற்று 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் B2B பிரிவில் மிகப்பெரிய ஈகாமர்ஸ் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. Udaan நிறுவனம் செலவுகளை குறைக்க 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
சைபர் செக்யூரிட்டி
சமீபத்தில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் இருக்கும் ஓன்டிரஸ்ட், சைபரீசன், லேஸ்வொர்க் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், இத்துறையில் மற்றொரு பிரபலமான IronNet சுமார் 55 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சுமார் 17 சதவீத ஊழியர்களை குறைத்துள்ளது.
நோவா பெனிபிட்ஸ்
பெங்களூரை தலைமையிடமாக வைத்திருக்கும் நோவா பெனிபிட்ஸ் சுமார் 70 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் ஒரே மெயிலில் 70 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதவியை கைப்பற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
Layoff Tsunami: From Byjus to Tesla; employees were layoff just for cost cutting
Layoff Tsunami: From Byjus to Tesla; employees were layoff just for cost cutting பணிநீக்கம் சுனாமி: பைஜூஸ் முதல் டெஸ்லா வரை.. உஷார் மக்களே..!