திருவள்ளூர் மாவட்டத்தில், ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்திற்குள் பவுடரையும், தண்ணீரையும் ஊற்றிச் சென்ற விஷமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் திடீரென பழுதடைந்தது.
ஊழியர்கள் அந்த எந்திரத்தை திறந்து பார்த்த போது உள்ளே தண்ணீரும், பவுடரும் இருந்துள்ளது.
எடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காலை 10:30 மணியளவில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த எந்திரத்திற்குள் பவுடரை கொட்டி விட்டு, பின் தண்ணீரை ஊற்றி சென்றது தெரியவந்தது.