உதய்பூர் கொலையில் 'கராச்சி'-எடப்பாடி-யின் 'by-law' -மீண்டும் cryptocurrency மோசடி|விகடன் ஹைலைட்ஸ்

உதய்பூர் படுகொலையில் கராச்சி தீவிரவாத இயக்கம்?

கன்னையா லால்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர், பூத்மஹால் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். அண்மையில், முகமது நபிகள் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டும் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் கன்ஹையா லாலின் கடைக்குச் சென்ற இருவர் அவரின் தலையைத் துண்டித்துக் கொலைசெய்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த இரு நபர்களையும் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி எம்.எல். லாதர், கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் பெயர் ரியாஸ் அக்தாரி; இன்னொரு நபரின் பெயர் கவுஸ் முகமத் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், படுகொலையில் தொடர்புடைய கவுஸ் முகமதுவுக்கு, பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பான தவாத் – இ- இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், 2014 ஆம் ஆண்டு அவர் கராச்சிக்கு சென்று வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ‘மதவெறி நெருப்பை அணைக்க வேண்டும்’ என வலியுறுத்தி, உதய்பூர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விகடன் டிஜிட்டல் தலையங்கத்தைப் படிக்க க்ளிக் செய்க…

எடப்பாடிக்கு நம்பிக்கையூட்டிய அ.தி.மு.க ‘by-law’

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி…

பேன் இந்தியா திரைப்படங்களுக்கு இணையாக அதிமுகவில் நிகழ்ந்துவரும் அதிரடிக் காட்சிகளுக்கான டீசராக கடந்த 14-ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டம் அமைந்தது. தற்போதைய சூழலில் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற சரவெடியைப் பற்றவைத்தார், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி.

அடுத்தடுத்து அரங்கேறிய காட்சிகளால், அதிமுகவில் இரட்டைத் தலைமை கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது என நினைத்த வேளையில், இல்லை இது இடைவேளைதான் என பொதுக்குழு நடைபெறவிருந்த நாள் காலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக ஒரு அதிர்ச்சி கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது ஏற்கெனவே ஏற்கெனவே பேசிமுடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் தடை வாங்கியது.

இந்த நிலையில், ஜூலை 11 அன்று எடப்பாடி தரப்பு நடத்த உள்ள அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆனால், அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ்ஸை மொத்தமாக கட்டம் கட்டித் தூக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு கட்சியின் ‘by-law’கை கொடுக்கும் எனத் திடமாக நம்புவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அது என்ன ‘by-law’? அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க…

இப்படித்தான் நடக்கிறது கிரிப்டோகரன்சி மோசடி..!

பிட் காயின்

துரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அனுராதா(41). இவர் அதேபகுதியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு, சமையல் மசாலா அரைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில், இவருடைய தோழி ஐஸ்வர்யா கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனத்தில் நாம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய அனுராதா ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதற்கு தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6 மாதங்கள் வரை கூறியபடி பணம் அனுப்பியவர்கள் கடையை மூடிவிட்டு மறைந்தனர்.

தற்போது பணத்தை மீட்டுத்தரக் கோரி, கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ள அனுராதா, கிரிப்டோகரன்சி மோசடியில் ஏமாந்தது எப்படி, ஏமாற்றி கம்பி நீட்டிய நபர் தனது மோசடியை அரங்கேற்றியது எப்படி என்பதை படிக்க க்ளிக் செய்க…

Akash Ambani: அன்று 5 ரூபாய் பாக்கெட் மணி; இன்று Jio தலைவர்!

ஆகாஷ் அம்பானி தன் மனைவியுடன்

கனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்று ரிலையன்ஸ் ஜியோவைத் தவிர்த்துவிட்டு இந்திய செல்போன் மார்க்கெட்டை நினைத்துப் பார்க்க முடியாது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதன் துணை நிறுவனங்களில் ஒன்று, ரிலையன்ஸ் ஜியோ. இப்போது ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து முகேஷ் ராஜினாமா செய்துவிட்டு தன் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை அதன் தலைவராக நியமித்துள்ளார்.

பள்ளிக்குச் செல்லும்போது 5 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணி கொடுக்கப்பட்டு கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட ஆகாஷ் அம்பானி, Jio தலைவர் ஆனது எப்படி என்பதன் முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம்!  

சூர்யா

வ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும் போது அனைவரது மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுத்தான் செல்லும். ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு ஒருசில இந்தியப் படங்கள் பரிந்துரை செய்யப்படும். சத்யஜித் ரே ஏ.ஆர் ரஹ்மான், உள்ளிட்ட சிலர் ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்… சில கேள்விகள்..!

A day with MGR

ம்.ஜி.ஆரின் வீட்டுத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக ‘அன்னை நிலையம்’ என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்கு கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது. அங்கே அவரது தாயாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

”சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்ற கொள்கையை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று, பெற்ற அன்னைக்கு கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.”அப்படியொரு கொள்கையே எனக்குக் கிடையாதே. என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது.

நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக் கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகுவதையும் சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம்.

‘ஜெனோவா’ படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது ‘பரமபிதா’வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? ‘பெரிய இடத்துப் பெண்’ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வதுபோல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருதமலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

”சினிமாவின் மீதுள்ள மோகத்தால் அதில் நடிப்பதற்கு ‘சான்ஸ்’ கேட்டுக் கொண்டும் அநேகர் உங்களிடம் வருகிறார்களா?”

”நல்ல வேளையாக அப்படி வருபவர்கள் இப்போது மிகவும் குறைந்துவிட்டார்கள். இது வளர்ச்சிக்கு அறிகுறியென்றே நினைக்கிறேன்.”

1964 ல் சினிமா முதல் அரசியல் வரை எம்.ஜி.ஆரின் அளித்த சுவாரஸ்ய பதிவுகளை மேலும் படிக்க க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.